Monday, December 24, 2007

பில்லா - I'am Back



தமிழில் ரீமேக் படங்களுக்கு பிள்ளையார் சுழியாய் வந்திருக்கும் படம் பில்லா, ரஜினியின் பில்லா படத்தின் கதையை அட்சரம் பிசகாமல் அப்படியே எடுத்துக் கொண்டு பிரஸண்டேஷனில் சற்று மெருகூட்டி கொடுத்திருக்கிறார்கள், இயக்குனருக்கு ஒரு ரீமேக் படத்தை எடுக்கிறோம் என்ற பயம் வந்துவிட்டதோ என்னவோ கொஞ்சம் மெனக்கெட்டு சராசரி படங்களில் இருந்து விலகி இயக்கியிருக்கிறார், பொதுவாக ரீமேக் படங்களுக்கு இருக்கும் சங்கடம் பார்ப்பவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்திருக்கும், அதனால் சலிப்பு வந்துவிடும் என்பதால் படத்தை படு வேகத்தில் எடுத்திருக்கிறார்கள், விறுவிறுவென்று காட்சிகள் நகர்கின்றன, உலகத் தரத்திற்கு ஒலிப்பதிவிலும், ஒளிப்பதிவிலும் முன்னேற்றம் தெரிவது வரவேற்கத்தக்க வளர்ச்சி , எலக்ட்ரிக்கல் கிடார் முழு படத்திலும்( பாடல்கள் உட்பட ) ஒலித்துக் கொண்டிருக்கிறது, முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும், மலேஷியாவில் இரட்டை கோபுரத்தை பிண்ணனியாக்கி படம் முழுவதும் ஒளிப்பதிவி செய்யப்பட்டிருக்கிறது ,எல்லாம் இருந்தும் படத்தில் ஒரு குறை, இத்தனை உழைப்பையும் அவர்கள் ஒரு புது படத்திற்கு கொடுத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும், எவ்வளவு பாடுபட்டு அவர்கள் உழைத்திருந்தாலும் அடுத்து இதுதான் நடக்கும் என தெரிந்திருப்பதால் போரடிக்கிறது . நயன்தாரா தனது ‘நடிப்பில்’ நமீதாவை மிஞ்சிவிட்டார்( pun intended ) , பில்லா மோசமான வில்லன், வேலு நல்லவன், இரண்டு கதாப்பாத்திரத்திற்கும் சற்றேனும் வேறு படுத்தி குரல் கொடுத்திருக்கலாம், ஆனால் இரண்டு கதாப்பாத்திரத்திற்கும் அஜித் ஏதோ தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து பேசுவது போல் பேசுகிறார், அஜித்தை இயக்குனர் முழுமையாக உபயோகப்படுத்த தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது , ஆனாலும் அஜித்திற்கு இது ஒரு வெற்றிப் படமே, தொடர்ந்து டக் அடிக்கும் சேவக் எப்பொழுதாவது ஒரு மாட்சில் ஜம்பத்திசொச்சம் ஓட்டங்கள் எடுப்பார் பாருங்கள் அதைப்போலத்தான் அஜித்திற்கு பில்லா, படத்தின் வேகமும், எடுத்த விதமும் பில்லாவைக் காப்பாற்றிவிடுகிறது, “I ‘am Back “ இது அஜித் சொல்லும் ஒரு குத்து வசனம் ( அதாங்க punch dialogue ), உண்மையிலேயே
“He is Back”.

No comments: