Thursday, January 24, 2008

மதுரைக்கு போகாதடி – ரகுமான் அடித்த காப்பி

இன்றைக்கு பட்டி தொட்டியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் “மதுரைக்கு போககதடி “ என்ற பாடல் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கிறதை கவனித்தீர்களா? , ஏ.ஆர் . ரகுமான் கூட தேவா ,ராஜ்குமார் போல் அப்படியே பழைய பாடல்களை காப்பி அடிக்க ஆரம்பித்துவிட்டார், அதிலும் இந்த பாட்டு நாம் பல முறை கேட்ட பாட்டு ,நம் இளையராஜா இசையமத்து பாடிய பாட்டு, என்ன ரகுமான் முழு பாடலையும் காப்பி அடிக்காமல் முதல் இரண்டு வரிகளில் மட்டும் அந்த மெட்டை சுட்டுவிட்டிருக்கிறார், திடீரென்று இந்த பாடல் ஞாபகத்திற்கு வந்தது, பதிவிட்டுவிட்டேன்,
அந்த பாடல், ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ படத்தில் வரும் பாடலான,
‘சின்ன தம்பி பெரிய தம்பி,
இந்த தம்பி ரெண்டும் தங்க கம்பி’

அப்படியே கொஞ்சம் ரகுமான் பாடலில் இரண்டு வரிகளை பாடிப் பாருங்கள்,
‘மதுரைக்கு போகாதடி ,
தல ஆட்டாம பொம்ம நிக்கும்’

ரகுமான், நீங்கள் கூட அதே பழைய பல்லவிதானா?

<p><a href="undefined?e">undefined</a></p>

3 comments:

Tech Shankar said...

ஒரு நிமிடம் யோசிங்க..
போயும் போயும் அந்தப் பாட்டு ' சின்னத்தம்பி பெரிய தம்பி.. அந்தத் தம்பி ரெண்டும் தங்கக் கம்பி' - நல்லாவா இருக்கு..

வாழ்க்கையிலே எத்தனை முறை இந்தப் பாட்டை கேட்டு இருப்பீங்க..

நான் இந்தப் பாட்டை என் வாழ்க்கையில் 3 முறை கேட்டு இருந்தால் பேரதிசயம்.

இதைப் போகி பெரிசாக சீரியசாக எடுத்துக்கிட்டு - இதுக்கெல்லாம் பெரிய பி.எச்.டி ஆராய்ச்சி வேறு செய்துகொண்டு - போஸ்ட் போடுறீங்க..

இதுக்கு பின்னூட்டம் வேற....

mouli said...

//

// சார், அது கேக்காத பாட்டோ ,கேட்ட பாட்டோ, எப்படி இருந்தாலும் காப்பி காப்பிதானே! தப்புன்னா மன்னுச்சுருங்க ஹி ஹி

Hariharan # 03985177737685368452 said...

இந்தப் படத்துக்கு நேரடியாக இளையராஜா இசை அமைச்சதில்லை.

இளையராஜா அசந்த நேரத்தில் ட்யூன் நோட்ஸ் பேப்பரை லவட்டி கங்கை அமரன் இசையமைத்ததாகச் சொல்லிக்கொண்டு கங்கை அமரனே பாடியது.

ஏழு ஸ்வரத்தில் தானே எந்தப்பாட்டும் மெட்டுப் போடமுடியும்-ன்ற க்ரேட் எஸ்கேப் ரூட் ரஹ்மானுக்குத் தெரியாததா :))